அனைவராலும் பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 147 தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 147
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள் விவரம்:
1. குஜராத் - 21
2. மகாராஷ்டிரா - 31
3. மேற்கு வங்காளம் - 12
4. வட கிழக்கு -II - 05
5. ஆந்திர பிரதேசம் - 01
6. ஹிமாச்சல பிரதேசம் - 05
7. ஜம்மூ காஷ்மீர்15
8. ஒரிசா - 06
9. உத்திர பிரதேசம் (மேற்கு) - 01
10. உத்திர பிரதேசம் (கிழக்கு) - 03
11. அசாம் - 01
12. ராஜஸ்தான் - 10
13. மத்திய பிரதேசம் - 07
14. கர்நாடகம் - 11
15. பிகார் - 02
16. அந்தமான் மற்றும் நிகோபர் - 01
17. கேரளா - 01
18. செங்கல்பட்டு (சென்னை) - 04
தகுதி: பொறியியல் துறையில் Telecommunications, Electronics, Electrical, Radio, Computer, Information Technology(IT), Instrumentation பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயய்ப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.13,600 - 25,420 + இதர சலுகைகள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexambsnl.co.in அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடங்கும் தேதி: 01.12.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.12,2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://intranet.bsnl.co.in/bsnl/admin/dirhr_recruitment/circulars/TTA-SRD%20%281%29.PDFஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment