Friday, 6 November 2015

சென்னை பெட்ரோலிய கழகத்தில் தீயணைப்பு வீரர், பொறியாளர் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலிய கழகத்தில் காலியாக உள்ள Engineer/Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer - Grade-A (Fire & Safety)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fire, Fire & Safety பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், Industrial Safety பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Junior Technical Assistant (Grade-IV)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் 3 மாதத்திற்கு குறையாத அளவில் தீயணைப்பு வீரர் பயிற்சி பெற்று அதற்குரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், Industrial Safety பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: Engineer பணிக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Junior Technical Assistant பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Chennai Petroleum Corporation Limited என்ற முகவரியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து சாதாரண, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager (Personnel) Chennai Petroleum Corporation Limited, Post Box No: 1, Mnali, Chennai -600068
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:20.11.2015
மேலும் விவரங்கள் அறிய www.cpcl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment