![]() |
jean paul sartre |
திருப்போம். ஆனால் தேடி வந்த உலகின் உயரிய விருதையும் வேண்டாம் என்று மறுத்தவர்கள் வெகு சிலரே.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான்.
1964 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சார்ட்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
![]() |
Kissinger-and-Le-Duc |
இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சார்ட்ரே.
இதே போல் 1973 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லே டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இருவரும் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வர ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.
ஆனால் இன்னும் வியட்நாமில் அமைதி ஏற்படவில்லை என்றும், அமெரிக்கா மற்றும் வியட்நாம் அரசுகள் அமைதி ஒப்பந்தத்தை மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறிய லே டக் தோ இந்த விருதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
1938 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னரும் மூன்று பேர் நோபல் பரிசினை பெற்றுக்கொள்ளவில்லை.
இவர்கள் மூவரும் ஹிட்லரின் உத்தரவால் பரிசினை பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் எந்தத் தடையும் இல்லாத நிலையிலும் நோபல் பரிசினை பெற்றுக்கொள்ள மறுத்தவர்கள் ஜீன் பால் சார்ட்ரே மற்றும் லே டக் தோ ஆகியோர் மட்டுமே.
இதனால் அவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்பட்டுவிடவில்லை. பரிசைப் பெற்றுக் கொண்டவர்களைக் காட்டிலும் இவர்கள் இருவரையும்தான் வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
காணொளி:உலகம் அறிவோம்: நோபல் பரிசை ஏற்க மறுத்தவர்கள்.
No comments:
Post a Comment