ரஷ்யாவின் ஊரல் பகுதியில் ஷெல்யாபின்ஸ்க் என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி விண்கல் தாக்கியது. வின்னைப் பிளந்து கொண்டு சீறப் பாய்ந்த விண்கல் துகள்கள் பெரிய கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களை கிழித்துக் கொண்டு கொட்டியது. என்ன நிகழ்ந்தது என்ற அறியும் முன் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் ரஷ்யாவில் வின்கல் தாக்கிய செய்தி உலகம் முழுவதும் பரவியது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வின்கல் தாக்குதல் என்பதால் உலகம் மொத்தத்தின் கவனமும் செல்யாபின்ஸ்க் பக்கம் திரும்பியது.
இந்நிலையில், செல்யாபின்ஸ்க் வின்கல் துகள்கள் சில, பாரிஸில் இருக்கும் பழம்பெரும் அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 95 கிராம் எடை கொண்ட இந்த ஷெல்யாபின்ஸ்க் விண்கல்ளின் 6 துகள்கள், பிரான்ஸ் நாட்டின் பேரிஸிலுள்ள நேஷன்ல் ம்யூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி எனப்படும் (National Museum of Natural History) தேசிய அருங்கட்சியத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த 6 துகள்கள் மட்டுமல்லாது, ஊரல் பகுதி மக்களும், தங்கள் வசம் கிடைத்த விண்கல்ளின் துகள்களையும் இந்த அருங்கட்சியகத்திற்கு வழங்கியதாக தெரிகிறது.
ரஷ்யாவின் ஊரல் பகுதியின் பிரதிநிதியான மரியா க்ராஸ்மேன், நேஷன்ல் ம்யூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியின் இயக்குனரான தாமஸ் க்ரெனானிடம் இந்த துகள்கள்களை வழங்கினார். பேரிஸிலுள்ள நேஷன்ல் ம்யூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி தான் உலகின் மிக பழமையான சரித்திர சேகரிப்புகளை கொண்டது. இது 1635-ல் கார்டினல் ரிஷ்லியூ என்பவரால் நிறுவப்பட்டது.
Russia meteorite struck, puthiathalaimurai news collections, puthiathalaimurai news for science and technology collections 2013,
No comments:
Post a Comment