Tuesday, 16 July 2013

The mystery of the Bermuda Triangle ...! பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?!

மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால் காணாமல் போகும் பகுதியில், கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிறு பகுதிகூட கிடைப்பதில்லை. இவை தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கும் கேள்வி. பூமி கோளத்தில் பெர்முடா பகுதியின் எதிர் பகுதி ஜப்பானின் கிழக்கு கடல் பகுதி. பிசாசுக் கடல் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் செல்லும் கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போவதாகக் கூறப்படுவதுண்டு. இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ள அதீத காந்த ஈர்ப்பு விசையே விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுகின்றனர் சில ஆய்வாளர்கள். 1908-ம் ஆண்டுதான் பெர்முடா முக்கோணத்தில் முதல் விபத்து பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் இப்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது.
1918 - ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்., சைக்கிளாப்ஸ் (U.S.S CYCLOPS) என்ற கப்பல் இப்பகுதியில் சென்ற போது காணாமல் போனது. கப்பலில் பயணம் செய்த 306 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.
1945 - ம் ஆண்டு பெர்முடாஸ் பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படையின் சிறிய விமானம் காணமல் போனது. இது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று அப்பகுதிக்குச் சென்றது. 14 பேர் கொண்ட இக்குழுவினர் எவரும் இதுவரை திரும்ப வரவேயில்லை.
இவ்வாறு விமானங்களையும் கப்பல்களையும் உள்வாங்கி கபளிகரம் செய்யும் பெர்முடா முக்கோணம் மனித அறிவுக்கு எட்டாத மர்மமாகவே இன்றும் விளங்கி வருகிறது.

No comments:

Post a Comment