Monday, 11 January 2016

என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் பணி

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் என்.சி.சி. வீரர்களுக்கான 40-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் 54 பட்டம் பெற்ற என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 4 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
தேர்வு செய்யப்படும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் 2 கட்ட தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வுகள், உளவியல் தேர்வுகள், நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யது அதனை வெள்ளைத் தாளில் அதே மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதில் விவரங்களை தெளிவாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்களுடன், நீங்கள் என்.சி.சி. சான்றிதழ் பெற்ற அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பங்களை தலைமை என்.சி.சி. நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து ராணுவ ஆட்தேர்வு அதிகாரி அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment