இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service - 15
பணி: Indian Statistical Service - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment