Sunday, 28 July 2013

Tamil Nadu Veterinary and Animal Sciences University Research studies 2013 - கால்நடை பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு

CONTENTS: 
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் ஆராய்ச்சி படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெட்ராஸ் கால்நடை கல்லூரி, சென்னை, கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனம், நாமக்கல் மற்றும் பி.ஜி ஆராய்ச்சி மற்றும் விலங்கு அறிவியல், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Do not make that mistake again ...(இனி அந்த தவறை செய்யாதீர்கள்...)

 Picture :

do not do this again in tamil

CONTENTS
பொதுவாக எல்லோருமே தெரியாமல் சில தவறை செய்து விடுவார்கள். அதனை அவர்களே உணர்ந்து வருத்தப்படுவதும் உண்டு. சில சமயம் அதிகம் அவதிப்படுவதும் உண்டு.
சில நேரத்தில் நாம் செய்யும் தவறுகள், நமது வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும் அளவுக்கு விளைவுகள் நிறைந்ததாக இருக்கும்.
எனவே, சாதாரண குடும்பத்தலைவர்கள், தலைவிகள் செய்யும் சில நிதித் துறை சார்ந்த விஷயங்களையும், செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.
அவசியமில்லாததை  எக்காரணத்துக்காகவும் வாங்காதீர்கள்

Friday, 26 July 2013

Latest Sun photograph NASA space center in the United States


சூரியனின் போட்டோவை அமெரிக்காவின் நாசா விண் வெளி மையம்

இதுவரை வெளிவராத சூரியனின் போட்டோவை  அமெரிக்காவின் நாசா விண் வெளி மையம்  நவீன தொழில்சுடபம் மூல்ம எடுத்து வெளியிட்டு உள்ளது.

Wednesday, 24 July 2013

Thirukural Software and Pdf free Download

Thirukural Software and Pdf free Download 


TAGS:  thirukural download free with meaning tamil, thirukural tamil, thirukural download pdf, free thirukural download, thirukural freeware download, thirukural app, thirukural android, thirukural widget, thirukkural in tamil pdf free download, thirukural meaning, thirukural chapters, thirukural tamil explanation, thirukural explanation in tamil pdf, www.thirukural in tamil version, thirukkural in tamil download, thirukkural in tamil with meaning in pdf,  thirukkural in tamil pdf free download, thirukural with tamil meaning pdf free download, thirukural with tamil meaning pdf, thirukkural in tamil with meaning in tamil pdf, thirukkural in tamil free download, download thirukkural with meaning, 

CLICK THIS BELOW LINK :
click this link : 01
click this link : 02

Tuesday, 23 July 2013

Indian student discovered the smart street lights (இந்திய மாணவன் கண்டுபிடித்த ஸ்மார்ட் தெரு விளக்குகள்!!!!)

மே மாத வெயிலில் கூட காலை 10 மணிக்கும் மேல் வீணாக எரியும் தெரு விளக்குகளை நம்மூரில் நாம் நிறைய முறை பார்த்திருப்போம். இப்படி பொறுப்பற்றவர்களுக்கு சிந்தன் ஷா என்று வெளிநாடு வாழ் இந்தியர் கண்டுபிடித்துள்ள நவீன தொழில்நுட்பம் பொருந்திய தெருவிளக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லலாம்.
அப்படி என்ன சிறப்பு அந்த தெரு விளக்கில் என்கிறீர்களா? இவர் கண்டுபிடித்துள்ள தெரு விளக்குகள் தெருக்களில் மக்கள் நடமாடும் இருக்கும் போது மட்டுமே ஒளிரும்.
இந்த ஒளி அமைப்பின் பெயர் ட்வைலைட் (Tvilight). இது, புத்திசாலித்தனமான எல்.ஈ.டி (LED) லைட்டிங் முறையாகும்.
சிந்தன் ஷா நெதர்லாந்தை சேர்ந்த டெல்ஃப்ட் யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி (Delft University of Technology)-யில் படிக்கும் மாணவராவார். இவர் சிட்டிசென்ஸ் (“CitySense”) என்ற ஒரு சென்சாரை வடிவமைத்துள்ளார். இந்த சிட்டி சென்ஸ் சுற்றிவர, 360 டிகிரி-யிலும் ஆட்கள் நடமாட்டத்தை திறன் பட ஆராய்கிறது.

Saturday, 20 July 2013

தமிழகம் முழுவதும் 421 மையங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது 2,881 காலி இடங்களுக்கு 1½ லட்சம் பேர் போட்டி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 421 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2,881 காலி இடங்களுக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
2,881 காலி இடங்கள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பதவிகளுக்கான போட்டித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 421 மையங்களில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் 8,383 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சென்னையில் வேப்பேரி சி.எஸ்.ஐ. பெய்ன் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் ஆல்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 55 இடங்களில் தேர்வு நடக்கிறது. இந்த மையங்களில் 13,927 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

கத்தியின்றி ரத்தமின்றி நடந்த புரட்சி - Rattaminri kattiyinri the Revolution

நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் சம்பவங்கள் வரலாற்றில் பல முறை நிகழ்ந்திருக்கிறது. பல போராட்டங்கள் வன்முறைகளாக மாறி ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்திருக்கின்றன.
இவற்றுக்கு மாறாக கத்தியின்றி ரத்தமின்றி நடந்த ஒரு புரட்சியை பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ரோஜா புரட்சி. ரோஜா மலர் உற்பத்தியைப் குறிப்பதல்ல.
முன்னாள் சோவியத் நாடான ஜார்ஜியாவில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணமான எழுச்சிதான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ் அந்நாட்டு அதிபராக இருந்தபோது சிட்டிசன்ஸ் யூனியன் ஆப் ஜியார்ஜியா என்ற கட்சியே ஆண்டு வந்தது. ஆனால் அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கை, செயலற்ற தன்மை என அதிருப்தி பெருகி வரவே 2000மாவது ஆண்டு ஆளும் கட்சியிலிருந்து பலர் பிரிந்து சென்று வெவ்வேறு புதிய கட்சிகளை துவக்கினர்.

Friday, 19 July 2013

உலகம் அறிவோம்: நோபல் பரிசை ஏற்க மறுத்தவர்கள்..the Nobel Prize refuse personalities

jean paul sartre
உலகில் பட்டங்கள் பதவிகளை தேடி அலையும் மனிதர்களையும், பல்வேறு பட்டங்கள் பெற்ற மனிதர்களையும் பார்த்

திருப்போம். ஆனால் தேடி வந்த உலகின் உயரிய விருதையும் வேண்டாம் என்று மறுத்தவர்கள் வெகு சிலரே.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான்.
1964 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சார்ட்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Kissinger-and-Le-Duc
கிழக்கு மற்றும் மேற்கத்திய சமூகத்தினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு மேற்கத்திய அமைப்பு வழங்கக்கூடிய பரிசை தான் பெற விரும்பவில்லை என்றார் அந்த மார்க்சீயவாதி.
இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சார்ட்ரே.
இதே போல் 1973 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லே டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tuesday, 16 July 2013

The mystery of the Bermuda Triangle ...! பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?!

மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

Sunday, 14 July 2013

In the interview, things are not supposed to do: நேர்காணலில் செய்யக்கூடாத விஷயங்கள்

வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றிகரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.
இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் எந்த முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பி

'Telegram Service - தந்தியடிக்கும் நினைவுகள்… விடைபெறுகிறது ‘தந்தி சேவை

160 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்
த தந்தி சேவை இன்றுடன் விடை பெறுகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோவில் படம்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் வரலாறு குறித்து பார்க்கலாம்.
இண்டர் நெட்டும் , செல்போன்களும் இல்லாத காலத்தில் கொடி கட்டி பறந்த தந்தி சேவை தற்போது படிப்படியாக குறைந்து விட்டது. நஷ்டத்தில் இயங்கும் இந்த தந்தி சேவை இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூலம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தி சேவை நிறுத்தப்பட உள்ளதால் இந்த துறையில் பணியாற்றியவர்கள் தொலை தொடர்பு நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளில் மறு பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, 13 July 2013

They left the studies on the ... but popularized ...!இவர்கள் படிப்பை பாதியில் துறந்தனர்… ஆனாலும் பிரபலாமனார்கள்…!

படிப்பின் அவசியத்தை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆனால் முறையாக பள்ளிக்கல்வியை முடிக்காத பலர் எட்ட முடியாத உயரத்தை எட்டிய அதிசயமும் வரலாற்றுப் பக்கங்களில் இடம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பற்றி ஒரு சில சவாரஸ்ய தகவல்கள். கடின உழைப்பு, விடாமுயற்சி, விவேகம், இப்படி பல குணாதிசயங்களால் கோபுரத்தை அடைந்த சிலரைப் பற்றிய தகவல்கள் தான் இவை.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது படைப்புகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. ஆம் விதவிதமான கார்டூன்களை அனிமேட் செய்த இவர் 16

Thursday, 11 July 2013

The Chinese company has designed a 100 megapixel camera - 100 மெகாபிக்சல் கேமராவை வடிவமைத்துள்ளது சீன நிறுவனம்

சீன நிறுவனம் ஒன்று 100-மெகாபிக்சல் கொண்ட கேமராவை உருவாக்கியுள்ளது. ஐ.ஓ.ஈ 3 - கேன்பன் கேமரா (IOE3-Kanban camera), சைனீஸ் அகடமி ஆஃப் சயின்சஸ்-ன் கீழ் இயங்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆப்டிக்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா, வான்வழி மேப்பிங் (aerial mapping), பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்ற துறைகளில் உயர் தெளிவுத்திறன் படம் (high-resolution imaging) எடுக்க உபயோகிக்கப் படுகிறது.
இந்த கேமரா 10,240x10,240 (10,240 x 10,240 pixels) பிக்சல்கள் (pixels-படப்புள்ளி) அளவிலான புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டது.
இது மிகவும் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. -20 டிகிரி செண்டிக்ரேட் முதல் +55 டிகிரி செண்டிக்ரேட் வரை எந்த வித வெப்பநிலையிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

How flavored coffee is made ​​robot? - ரோபோ போட்ட காபி சுவை எப்படி இருக்கும்?

நீங்கள் சோர்வாக இருக்கும் நேரத்
தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச்சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும். இன்னும் 45 நாட்களில் இது சாத்தியமாக இருக்கிறது. ஆம் ! காபி போடக் கூடிய மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).
இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.
காபி போடுது மட்டுமல்லாது, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, வெப்ப நிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை, பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம்.

Wednesday, 10 July 2013

குரூப் 2 கேள்வித்தாள் அவுட்: பிரஸ் ஓனர் ரிஷிகேஷ் குண்டு கைது

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 12.8.2012-ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முன்கூட்டியே வினாத்தாளை வைத்திருந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் உள்பட மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தை úóந்த மனோகரன் மகன் மோகன்பாபு (24), சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கணக்காளராக பணியாற்றும் ஜெய்நிவாசன் (26), மேடவாக்கத்தை சேர்ந்த பச்சியப்பன் மகன் சதீஷ்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நாமக்கல்லை சேர்ந்த இன்டர்நெட் மைய உரிமையாளர் செல்வராஜ், திருவள்ளூரை சேர்ந்த சகோதரர்கள் தியாகராஜன்,

Sunday, 7 July 2013

ரஷ்யாவை தாக்கிய விண்களுடைய துகள்கள் பாரிஸ் அருங்காட்சியத்திடம் ஒப்படைப்பு - Russia meteorite struck

ரஷ்யாவின் ஊரல் பகுதியில் ஷெல்யாபின்ஸ்க் என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி விண்கல் தாக்கியது. வின்னைப் பிளந்து கொண்டு சீறப் பாய்ந்த விண்கல் துகள்கள் பெரிய கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களை கிழித்துக் கொண்டு கொட்டியது. என்ன நிகழ்ந்தது என்ற அறியும் முன் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் ரஷ்யாவில் வின்கல் தாக்கிய செய்தி உலகம் முழுவதும் பரவியது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வின்கல் தாக்குதல் என்பதால் உலகம் மொத்தத்தின் கவனமும் செல்யாபின்ஸ்க் பக்கம் திரும்பியது.

Wednesday, 3 July 2013

வால்பாறை அருகே ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் பள்ளி - Running the school for a student near valparai


கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த கள்ளர்குடி என்ற பகுதியில் இயங்கும் கள்ளர்குடி பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார்.
அந்த ஒரே ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியரும், ஒரு தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.