பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு ஏற்பட்டுள்ள 4318 காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெத்த காலியிடங்கள்: 4318
மண்டலங்கள் வரியான காலியிடங்கள் விவரம்:
தெற்கு மண்டலம் - 1194
வடக்கு மண்டலம் - 1702
கிழக்கு மண்டலம் - 473
மேற்கு மண்டலம் - 779
வடகிழக்கு மண்டலம் - 170
சம்பளம்: இளநிலை பொறியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.11100 - 29950 வழங்கப்படும்.
உதவியாளர் (கிரேடு-II) பணிகளுக்கு மாதம் ரூ.9300 - 25530
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். உதவியாளர் (கிரேடு -III) பணியிடங்களுக்கு 01.01.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியாளர் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தட்டச்சில் நிமிடத்திற்கு இந்தியில் 30 வார்த்தைகள் தட்ச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பப்பிவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.350. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் AAACF0365NST099 என்ற வங்கி கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
எஸ்.சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெணகளுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்புமும் தகுதியும் உள்ளவர்கள் www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://fcijobsportal.com/fci2014/pages/index2014.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment