Wednesday, 10 June 2015

தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் ஆய்வக உதவியாளர் பயிற்சி பணி

தேசிய அனல் மின் கார்ப்பரேன் கீழ் (என்டிபிசி) சிறப்பு அனல் மின் திட்டங்களில் நிரப்பப்பட உள்ள 22 ஆய்வக உதவியாளர் (வேதியியல்) பயிற்சி பணிக்கான அறவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NTPC-SRHQ/Hyderabad: 01/2015
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
பணி: ஆய்வக உதவியாளர் (வேதியியல்) டிரெய்னி
மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Ramagundam (Telangana) - 08
2. Simhadri (Andhra Pradesh) - 04
3. Kudgi (Karnataka) -  08
4. Kayamkulam (Kerala) - 02
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15.06.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைகளின் படி, SC / ST / OBC / பொதுப்பணித்துறை பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.11,500. வெற்றிகரமாக பயிற்சியை படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் ரூ.11,500 - 3% - 26,000 (W3 கிரேட்) அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  15.06.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://jobapply.in/ntpc2015/Adv-Eng.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment