அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுனத்தில் (TNPL) நிரப்பப்பட உள்ள 18 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 18
பணி: மேலாண்மை பயிற்சி
தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சந்தையியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது முதல் வகுப்பில் அறிவியல் அல்லது வணிகவில் துறையில் பட்டம் பெற்று சந்தையியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 25க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித் தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.18,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20,250 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து
Deputy General Manager (Corporate Technical Cell)
Tamil Nadu Newsprint and Papers Limited
NO.67, Mount Road, Guindy, Chennai – 600 032 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/18_post_200515.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment