Wednesday, 2 September 2015

புதுச்சேரி அரசுத்துரையில் 503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புதுச்சேரி அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 503 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரியில் 5 ஆண்டுகள் வசித்து இந்திய குடியுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: மேல்நிலை எழுத்தர்
காலியிடங்கள்: 503. இதில் பொது பிரிவினருக்கு 253, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 90, தாழ்த்தப்பட்டோருக்கு 80 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 11.09.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 மணிநேரம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.
கணிதம். பொது அறிவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய வரலாறு, பொது அறிவு, தற்போதைய நடப்பு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த எழுத்துத்தேர்வுக்கான நாள், இடம், நேரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கு பின் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் பற்றி இணையதளத்தில் வெளியிடப்படும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.recruitment.puducherry.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 0413-2233215 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment