மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின் பகிர்மானகழகத்தில் (Power Grid Corporation of India) நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பொறியியல் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
காலியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: பவர் சிஸ்டம் அல்லது அதற்கு இணையான பொறியியல் பிரிவில் எம்.டெக், எம்.இ, எம்.எஸ், எம்.எஸ்சி பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பொறியியல் படிப்பில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.460. இதனை ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்த வேண்டும்.
இதற்கான செல்லான் படிவம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சான்றை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/cc/2015/phd/Detailed%20Advertisement%20M_Tech%20-PS.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment