Thursday, 17 September 2015

இந்திய கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணி

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய கரன்சி மற்றும் முத்திரை தாள்களை அச்சடிக்கும் அச்சகத்தின் (SPMCIL) 9 பிரிவுகளில் ஒன்றான மத்தியபிரதேசத்தின் Hoshangabad-ல் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர், ஜூனியர் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Admn./2(167)/2015-16/ Adv.No.25
பணி: Supervisor(Technical) Level: S-1
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 25,400
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Electronics and Instrumentation, Mechanical, Plulp & Paper Technology, Chemical Technology, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Data Entry Operator - cum Office Assistant (Level: w-3)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு ஹிந்தியில் 40/30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman(Welder)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருகத்க வேண்டும். இதே பிரிவில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: Supervisor மற்றும் Workman பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும், Junior Data Entry Operator - cum Office Assistant பணிக்கு Skill Test , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment