Monday, 7 April 2014

இந்திய பொறியியல் பணித் தேர்வு

இந்திய பொறியியல் பணித் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 21 கடைசி தேதி

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்திய பொறியியல் பணித் தேர்வுக்கு (இ.எஸ்.இ.-2014) விண்ணப்பிக்க ஏப்ரல் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ். போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளைப் போல் இந்திய பொறியியல் பணித் தேர்வையும் யு.பி.எஸ்.சி. ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
2014-ஆம் ஆண்டுக்கான இ.எஸ்.இ. தேர்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
இதில், தகுதி பெறுபவர்கள் இந்திய ரயில்வே, ராணுவம், கப்பற்படை, ராணுவ தளவாடங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை, நில அளவைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் உதவி செயற் பொறியாளர் பணி அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணியமர்த்தப்படுவர்.
இவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: பி.இ. மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ. (எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்) மற்றும் இ.சி.இ. (தகவல் தொழில்நுட்ப பொறியியல்) படித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
மேலும், வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ இயற்பியல் அல்லது ரேடியோ பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை சிறப்புப் பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி. முடித்தவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரையுடையவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் www.upsonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டு: தேர்வு தொடங்குவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாக, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் தேர்வறை நுழைவுச் சீட்டு யு.பி.எஸ்.சி. இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அனுமதிச் சீட்டு தேர்வர்களுக்குத் தபாலில் அனுப்பப்படமாட்டாது.

No comments:

Post a Comment