மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலில் காலியாக உள்ள 23 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. உதவி இயக்குநர் (டெக்னிக்கல்) - 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் பி.இ/பி.டெக் அல்லது ஏதாவது ஒரு அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில் நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 3 வருட இன்ஸ்பெக்ஷன் அல்லது டெஸ்டிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
02. டெக்னிக்கல் ஆபீசர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பி.இ/பி.டெக் பட்டம் அல்லது அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில்நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி துறையில் இன்ஸ்பெக்ஷன் மற்றும் டெஸ்டிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் பி.இ/ பி.டெக் அல்லது அறிவியல் பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல் மற்றும் மைக்ரோ பயாலஜி துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. லேபரட்டரி அசிஸ்டென்ட் (கிரேடு - 2) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து உணவு பரிசோதனை ஆய்வு கூடத்தில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை 'Export Inspection Council of India, Delhi'என்ற பெயரில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.eicindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
EXPORT INSPECTION COUNCIL OF INDIA,
3rd Floor,
NEWDELHI YMCA Cultural Centre Building,
1, Jaisingh Road,
NEW DELHI 110 001.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2014.
No comments:
Post a Comment