மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள ஜூனியர் மற்றும் சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்கள் ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மத்திய அரசின் பிரதான மற்றும் துணை அலுவலகங்களில் ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்.
கல்வித் தகுதி: ஆங்கிலம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் மற்றும் பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை கட்டாயமாகவோ அல்லது தேர்வு செய்தோ படித்திருக்க வேண்டும் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
02. மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்.
03. மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்
கல்வித் தகுதி: மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் ஆங்கிலத்தை துணைப் பாடமாகக் கொண்டு இந்தியில் முதுகலை பட்டம் அல்லது இந்தியை துணைப் பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் அல்லது இந்தி, ஆங்கிலம் அல்லாத பாடங்களில் முதுகலை பட்டத்துடன் துணைப் பாடங்களாக இந்தி மற்றும் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.
04. மத்திய இந்தி பயிற்சி நிலையம் மற்றும் மாநில அலுவலகங்களில் இந்தி பிரத்யபாக்.
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு இந்தியில் முதுகலை பட்டம் மற்றும் சீனியர் செகண்டரியில் இந்தி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 'சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ' மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor, College Road,
CHENNAI 600006.
Tamilnadu.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.04.2014.
No comments:
Post a Comment