சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தில்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் பட்டப்படிப்புடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
திறந்தநிலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி முறையில் பெற்ற பட்டங்கள் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். என்சிசி 'பி' அல்லது 'சி' சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. அஞ்சலில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ரூ.100க்கான 'சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் பீ' ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இணையதளத்தில் இருந்து செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.
எஸ்சி., எஸ்டியினர், அனைத்துப் பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்திறன், உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு: இரு தாள்களை கொண்டது. முதல் தாள் 22.06.2014 அன்றும், இரண்டாம் தாள் 21.09.2014 அன்றும் நடைபெறும்.
தாள் - 1ல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தாள் - 2க்கு அனுமதிக்கப்படுவர்.
தபாலில் விண்ணப்பிப்பவர்கள் http://ssc.nic.in/SSC.html என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்தில்ன் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
பகுதி-1 ஆன்லைன் படிவத்தை நிரப்ப கடைசி நாள்: 9.4.2014.
பகுதி-2 ஆன்லைன் படிவத்தை நிரப்ப கடைசி நாள்: 11.4.2014.
அஞ்சலில் விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Diretor(SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor ,College Road,
Chennai 600 006.
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment