Wednesday, 31 December 2014

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கேண்டீன் உதவியாளர், சுருக்கெழுத்தர் பணி

மும்பை தாராபூர் அருகே செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014-R-III
பணி: Canteen
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 16.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேண்டீனில் டீ, காஃபி, பழச்சாறு தயாரிக்கவும் அதை பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Stenographer, Grae-III
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், டேட்டா என்ட்ரி, டேட்டா புராசசிங் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பணி: Stenographer, Grae-II
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும் 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Tuesday, 30 December 2014

தேசிய அருங்காட்சியகத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய வரலாற்று ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/01/2014-P-III

பணி: Scientist-"B"
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Zoology,Botany,Geology, Life Science, Environmental Science, Wildlife போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத்தில் செயல்பட்டு வரும் இயற்கை அருங்காட்சியகத்தில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Museology துறையில் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Scientist-"D"
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems போன்ற ஏதாவதொரு துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist-"E"
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems,Pollution Control Works போன்ற துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Veterinary Officer (National Zoological Park)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Veterinary Science துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வன விலங்கு மற்றும் பறவைகளை கையாளுவதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 3-ம் வகுப்பு A/C ரயில் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பணி

FACT என அழைக்கப்படும் அரசுத் துறை நிறுவனமான உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள TECHNICIAN (DIPLOMA) APPRENTICES, TRADE APPRENTICES பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 173
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Technician (Diploma) Apprentice - 40
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Technician (vocational) App. - 15
3. Trade Apprentice - 118
தகுதி: இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம். பிட்டர், வெல்டர், பிளம்பர், டீசல் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/apprentice_2015_16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கொல்கத்தா துறைமுக கழகத்தில் சிவில் பொறியாளர் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கொல்கத்தா துறைமுக கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், சிவில் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
A. Assistant Manager
1. Railways  02
2. Shipping & Cargo Handling  02
3. Personnel & Industrial Relations  01
4. Materials Management - 01
5. Plant & Equipment - 02
B. Civil Engineer - 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,000
C. Supervisor (Civil) - 04
தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.12.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
office of Manager(P&IR) ,
Haldia Dock Complex,
Jawahar Tower Building,
Haldia Township , Purba Medinipur
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kolkataporttrust.gov.in/vac_hdc_officer_supervisor_civil_241214.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 29 December 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புனேவில் செயல்பட்டு வரும் அம்யுனிஷன் ஃபேக்டரி எனும் துப்பாக்கி மருத்துவத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 273 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 273
பணி
1. மேசன்
2. பாய்லர் அட்டண்டன்ட்
3. கார்பென்டர்
4. செமி ஸ்கிஸ்ட்
5. ட்ரேட்ஸ்மென்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி தொடர்பான பிரிவுகளில் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் தொடர்பான செய்முறை தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.afk.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub-inspector
காலியிடங்கள்: 79
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Head Constable
காலியிடங்கள்: 97
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விளையாட்டு திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தெவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை நேர்முகத்தேர்விற்கு வரும்போது கொண்வர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IPO-வாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2015

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி பணி

வாரணாசியில் செயல்பட்டு வரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள 08 Data Entry Operator, Field Worker, Junior Research Fellow போன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: வாரணாசி (உத்தரப் பிரதேசம்)
பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.12000.

பணி: Field Worker
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.11000

பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16000

கல்வித்தகுதி:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பி.சி.ஏ. அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Field Worker பணிக்கு Sociology, Social Work துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Research Fellow பணிக்கு Zoology,Life Sciences,Biochemistry,Biotechnology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bhu.ac.in/Advetisment/dec2014/TMRC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு: இந்திய அரசு அழைப்பு

குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைதொடர்புத்துறையில் பணியாற்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் இன்ஜினியர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவமுள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், 5 ஆண்டு அனுபவத்துடன் துவக்கப்பள்ளி தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள்,  8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற ரிகர்கள் மற்றும் தொழிலாளர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகுரக மற்றும் கனகரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். மேற்காணும் பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், எண்.42,  ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீழ்ங்ள்ன்ம்000ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 94446 96724, 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 28 December 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 21
பணி: பேராசிரியார்
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் தமிழ்த் துறையில் முதுகலை பட்டம் பெற்று UGC நடத்தும் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு என்எல்சியில் தொழிற்பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் சட்டம் 1961ன் விதிகளுக்குட்பட்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி விவரங்கள் வருமாறு:
1. டெக்னிக்கல் அப்ரன்டிஸ் பயிற்சி:
காலியிடங்கள்:
மெக்கானிக்கல் - 70
எலக்ட்ரிக்கல் - 60
சிவில் - 20
இன்ஸ்ட்ருமென்டேசன் - 10
கெமிக்கல் - 10
மைனிங் - 10
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 10
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 10
கமர்ஷியல் பிராக்டிஸ் - 10

பயிற்சி காலம்: ஒரு வருடம்.
உதவித் தொகை: மாதம் ரூ.2,530.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.01.2012க்கு பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரன்டிஸ் பயிற்சி
காலியிடங்கள்:
குழந்தை கவனிப்பு மற்றும் சத்துணவு - 5.
பல் மருத்துவம் - 5
பல் டெக்னீசியன் - 2
இசிஜி ஆடியோ மெட்ரிக் டெக்னீசியன் - 5
ஹெல்த் வொர்க்கர் - 15
மருத்துவ ஆவண உதவியாளர் - 10
மருத்துவமனை பராமரிப்பு - 25
பல்நோக்கு பணியாளர் - 15

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு

சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தமிழ்நாடு பொது சுகாதார பணியிலுள்ள சுகாதார அலுவலர் (Health Officer) பதவியில் 33 காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of Sanitary Science) அல்லது Diploma in Public Health அல்லது Licentiate in Public Health அல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMP கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.nett என்ற முகவரியில் உள்ளன. இணைய வழியில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பதவிக்கான எழுத்து தேர்வு 22.02.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை மையத்தில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.01.2015. மேலும் இப்பதவிக்கான வயதுவரம்பு, கல்வித்தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான  www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஒப்பந்த பேராசிரியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,400  -67,000 + தர ஊதியம் ரூ.10,000.

பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.37,400- 67,000 + தர ஊதியம் ரூ.10,000.

பணி: இணைப் பேராசிரியர்
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.37,400- 67,000 + தர ஊதியம் ரூ.9,000.

பணி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.6000.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விமானப்படையில் பெண் பட்டதாரிகளுக்கு பணி

இந்திய விமானப்படையின் Flying பிரிவு Technical மற்றும் Ground Duty பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியிடல் சேருவதற்கான AFCAT-01/2015 தேர்வு எழுத தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி கடைசி தேதி: 01.01.2015
மேலும் உடற்தகுதிகள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.in.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 27 December 2014

டெரிடோரியல் ராணுவத்திற்கு அதிகாரி பணி

இந்திய ராணுவத்தின் டெரிடோரியல் ராணுவத்திற்கு அதிகாரிகளாக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணியாற்றுவோர், தனியார்துறை, வணிகம், சுய தொழில் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெரிடோரியல் ராணுவ அதிகாரி.
வயது: 31.12.2014 தேதியின்படி 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணியாற்றுவோர்,தனியார்,தனியாக தொழில் செய்வோர், சுய தொழிலில் ஈடுபடுவோராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
ராணுவ சேவை சம்பளம்: ரூ.6000 என்ற சம்பள விகிதத்தில் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியமர்த்தப்படுவர்.
பயிற்சி: முதலாம் ஆண்டு அடிப்படை பயிற்சியும், முதல் ஆண்டு உள்பட ஒவ்வொரு ஆண்டும் 2 மாத ஆண்டு பயிற்சியும், முதல் 2 ஆண்டுகள் 3 மாத முதுகலை பயிற்சியும் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: ஜெய்ப்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commander,
TA Group of Headquarters,
Southern Command,
PUNE 411001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மஹாராஷ்டிரா மாநில சுற்றுலா துறையில் உதவி கணக்காளர் பணி

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சுற்றுலா வளர்ச்சி துறையில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 19 உதவி கணக்காளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்: Maharashtra Tourism Development Corporation MTDC
பணி: Accounts Assistant
தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17500.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.12.2014 அன்று காலை 10.30 - 1.30 வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.maharashtratourism.gov.in என்ற இணையதளத்திதை பார்க்கவும்.

RITES நிறுவனத்தில் மேலாளர் பணி

இந்திய அரசு நிறுவனமான RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர்(சிவில்), ஜூனியர் பொது மேலாளர்(நிதி), துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: General Manager (Civil)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior General Manager (Finance)
வயதுவரம்பு: 48க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000
தகுதி: பட்டம் பெற்று CA / ICWA முடித்து 16 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Personnel)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.51,300 - 73,000
தகுதி: மனிதவளத்துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணி

இந்திய ராணுவத்தின் Territorial Army பிரிவில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: officer (Territorial Army)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவதகுதித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015
தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூர், ஹைதராபாத், புனோ, ஜெய்ப்பூர்
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commander, T A Group, Head Quarters Southern Command, Pune - 411001.
Phone: 77680 03601, 7768003602
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 26 December 2014

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

மேற்கு வங்காள மாநிலத்தின் சாந்திநிகேதனில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பல்கலைக்கழகமான விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 64
பணி: 51 துறைகளில் பேராசிரியர், இணைப்பேராசிரியர், உதவி பேராசிரியர்
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பேராசிரியர் பணிக்கு 45க்குள்ளும், இணைப் பேராசிரியர் பணிக்கு 40க்குள்ளும், உதவிப் பேராசிரியர் பணிக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.visvabharati.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய பீகார் கிராமிய வங்கியில் அதிகாரி பணி

பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய பீகார் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 376 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 376
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-III -  02
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதியியல் துறையில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Officer Scale-II (Agricultural Officer) - 27
வயதுவரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Agriculture, Horticulture, Dairy, Animal Husbandry, Forestry, Veterinary Science, Agricultural Engineering போன்ற எதாவதொரு துறையில் பட்டம் பெற்று இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Officer Scale-I - 147
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

4. Office Assistant (Multipurpose) - 200
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர் / அக்டோபர் 2014ல் IBPS CWE RRB-III 2014 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ. 20.
விண்ணப்பிக்கும் முறை:  http://mbgbpatna.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mbgbpatna.com/home/imagebag/image160_1418629800.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

சத்தீஸ்கரில் செயல்பட்டுவரும் பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (PSSOU)காலியாக உள்ள 21 பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம். சத்தீஸ்கர்
காலியிடங்கள்: 21
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 AGP - 10,000
2. இணை பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ. 37400-67000 AGP- 9,000
3. உதவி பேராசிரியர் - 13
சம்பளம்: மாதம் ரூ.உதவி பேராசிரியர் - ரூ. 15600-39100 AGP 6,000
கல்வித்தகுதி: முதுகலை பட்டத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ 500.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Regitrar Office,Pandit Sundarlal Sharma (Open) University,Koni-Bikona Road, Bilaspur (Chhattisgarh) – 495009″.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு விவரங்கள், போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pssou.ac.in/ADMIN/15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 25 December 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வித் துறையில் பணி

இந்திய ராணுவ கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (Army Education Corps (AEC))
வயதுவரம்பு: 23 - 27க்குள் இருக்க வேண்டும். 02.07.1988 - 01.07.1992க்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல, அரசியல் அறிவியல், தத்துவ இயல், உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வியல், புள்ளியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், ஜியாலஜி, நானோ அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ, எம்.காம், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது Chinese/ Tibetan/Burmese/Pushto/Dari & Arabic மொழிகளில் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட துறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவை நடத்தப்படும்
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் மையங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
நேர்முகத்தேர்வு 2015 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை இரண்டு பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் கையெப்பம் பெற்று அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கொண்டு வர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இமாச்சல பிரதேசத்தில் சிவில் நீதிபதி பணி

இமாச்சல பிரதேசத்தில் காலியாக உள்ள சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Himachal Pradesh  Public Service Commission (HPPSC) Recruitment 2014
மொத்த காலியிடங்கள்: 15
பணி: Civil Judge (Junior Division)
சம்ளம்: மாதம் ரூ.27700 - 44770
வயது வரம்பு: 22 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்திய பார் கவுன்சில் அங்கீகரித்துள்ள சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.hp.gov.in/hppsc இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Controller of Examination, Himachal Pradesh Public Service Commission, Nigam Vihar, Shimla – 171002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://hp.gov.in/hppsc/file.axd?file=2014%2f12%2fAdvt+No+-+6_2014++HP+JUDICIAL+SERVICE+COMPETITIVE+EXAMINATION+-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்தியன் ஆயில் கழகத்தில் மார்க்கெட்டிங் அதிகாரி பணி

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் எரிசக்தியை சப்ளை செய்யும் இந்திய ஆயில் கழகத்தின் மார்க்கெட்டிங் மற்றும் மனிதவளத் துறையில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
தகுதி: மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் பாடத்தை சிறப்பு பாடமாக எடுத்து பிசினஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் 2 வருட முழு நேர ரெகுலர் கோர்சில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: மனிதவள மேலாண்மை துறை
தகுதி: மனிதவளம் பாடத்தில் 2 வருட ரெகுலர் முழுநேர டிப்ளமோ முதுகலை பட்டம், பெர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் ரிலேசன்ஸ், சமூக நலம் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் யுஜிசி - நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: யுஜிசி நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் குழுப்பணி, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014.

தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும், நீதித்துறை அகாடமியில் பணி

தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும், நீதித்துறை அகாடமியில் (NLUJA) நிரப்பப்பட உள்ள பேராசிரியர் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவன பெயர்: National Law University and Judicial Academy (NLUJA)
பணியிடம்: Guwahati, Assam
காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Professors of Law - 03
2. Associate Professors of Law - 06
3. Assistant Professor of Law - 09
4. Assistant Professor of Economics - 01
5. Assistant Professor of English -01
6. Assistant Professor of History -01
7. Assistant Professor of Political Science -01
8. Assistant Professor of Sociology -01
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01-01-2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Professors – மாதம் ரூ.. 37400-67000 + AGP INR 10000
2. Associate Professors மாதம் ரூ. 37400-67000 + AGP INR 9000
3. Assistant Professor மாதம் ரூ. 15600-39100 + AGP INR 6000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nlusassam.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000. மற்ற பிரிவினருக்கு ரூ.750. இதனை Deputy Registrar (Finance), National Law University and Judicial Academy, Assam, NEJOTI Building, Bholanath Mandir Path, B.K. Kakati Road, Ulubari, Guwahati-781007 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி. 26.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nluassam.ac.in/recruitment.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.