MP online Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 86 Divisional Coordinator, District Coordinator மற்றும் Software Engineer பணியிடங்களை நிரப்ப இளம் மற்றும் திறமையான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 86
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Divisional Coordinator - 10
2. District Coordinator - 51
3. Software Engineer - 25
கல்வித் தகுதி:
1.Divisional & District Coordinator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டத்துடன் PGDCA / DOEACC 'ஒரு வருட படிப்பில் டிப்ளமோவில் "A" பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனைத்தும் முழுநேர படிப்பாக இருக்க வேண்டும்.
2.Software Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் (தகவல் தொழில்நுட்பம் / கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும். அல்லது தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் MCA,M.Sc முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எம்.பி. வாரியம் ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் வினாக்கள் அமைந்திருக்கும் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. District & divisional Coordinator பணிக்கு ரூ. 390.
2. Software Engineer பணிக்கு. ரூ. 390
3. மற்ற பணிகளுக்கு ரூ.780
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தயவுசெய்து ஆன்லைன் முறை மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதற்கான இடத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஸ்கேன் பிரதியை பதிவேற்ற செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.07.2014
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 18.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mponline.gov.in என்ற இணை.யதளத்தைப் பார்க்கவும்.