இந்தி உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள Senior Personal Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணி: Senior Personal Assistant
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
பணி: Personal Assistant
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவும் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறனும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300. SC/ST/ PH, முன்னாள் படைவீரர் மற்றும் விடுதலை போராட்ட வீரர் பிரிவினருக்கு ரூ.150. இதனை Registrar(Admn.), Supreme Court of India என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். கட்டண சலுகைகள் பெறுபவர்கள் அதற்கான சான்றிதழ் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: உச்சநீதின்றத்தின் மதுரா சாலை Gate “E” பகுதியில் இயங்கும் புதிய வரவேற்பரை அலுவலக பிரிவில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பெற்று தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar (Admn. I), Supreme Court of India, Tilak Marg, New Delhi-110201
பூர்த்தி செய்யப்பட் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:20.06.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்குhttp://supremecourtofindia.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment