Sunday, 15 June 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பணி

இந்திய ராணுவத்தில் 2015 ஜனவரியில் தொடங்க உள்ள 120-வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்சில் சேருவதற்கு பி.இ., படித்த இந்திய ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப்பிரிவு: 120th Technical Graduate Course (TGC120) (July2015).
மொத்த இடங்கள்: 60
துறைவாரியான விவரங்கள்:
01.சிவில் - 15
02. மெக்கானிக்கல் - 10
03. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 05
04. ஆட்டோமொபைல், ஒர்க்ஷாப் டெக்னாலஜி - 01
05. ஏரோநாட்டிக்கல், ஏவியேஷன், ஏரோ ஸ்பேஸ், பாலிஸ்டிக்ஸ், ஏவினோக்சிஸ் - 01
06. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - 05
07. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் - 08]
08. எலக்ட்ரானிக்ஸ், பைபர் ஆப்டிக்ஸ் - 05
09. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் - 02
10. ஆர்க்கிடெக்சர் - 02
11. புட் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி - 02
12. கெமிக்கல் இன்ஜினியரிங் - 01
13. மெட்டாலர்ஜி - 01
14. இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் - 02
வயது வரம்பு: 20 - 27-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1988 - 01.01.1995-க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மேற்குறிப்பிடப்பட்ட ஏதாவதொரு துறையில் பி.இ. முடித்திருக்க வேண்டும். (இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்). இவர்கள் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னர் தகுதியானவர்களுக்கு உ.பி., அலகாபாத், மத்திய பிரதேசம் போபால், கர்நாடகா பெங்களூர் ஆகிய இடங்களில் 5 நாட்கள் தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
உடற்தகுதி: உயரம்: 157.5 செ.மீ., கண் பார்வை, தூர பார்வை 6/6, 6/18. இந்த கோர்சுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டேராடூன், மிலிட்டரி அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் தரத்தில் பணியமர்த்தப்படுவர்.
ஊக்கத் தொகை: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் ரூ.15,600 - 39,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment