கர்நாடகா மாநிலம் கர்வாரில் செயல்பட்டு வரும் கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான பயிற்சிக்கான இடங்கள் விவரம்:
01. பிட்டர் - 05
02. மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 08
03. எலக்ட்ரானிக் மெக்கானிக் - 08
04. எலக்ட்ரீசியன் - 05
05. மெஷினிஸ்ட் - 03
06. வெல்டர் - 02
மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படும்.
01. பிளம்பர் - 02
02. கார்பென்டர் - 02
o3. ஷீட் மெட்டல் ஒர்க்கர் - 07
04. ஷிப்ரைட் - 05 மேற்கண்ட பிரிவுகளுக்கு இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 05.10.1993 - 05.10.2000-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.2,100, ரூ.2,400, ரூ.2,870, ரூ.3,100 என பயிற்சி பெறும் துறை மற்றும் கால அளவுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.07.2014. அன்றே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 06.10.2014 முதல் பயிற்சி ஆரம்பமாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: THE OFFICER-IN-CHARGE, DOCKYARD APPRENTICE SCHOOL, NAVAL SHIP REPAIR YARD, NAVAL BASE-P.O., KARWAR-581308, KARNATAKA.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_616_1314b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment