தில்லி கல்வித்துறையில் காலியாக உள்ள 87 BURCC, CRCC & Accountant cum Supporting Staff பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவற்கான அறிவிப்பை தில்லி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 87
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. BURCC - 03
சம்பளம்: மாதம் ரூ.22,500
2. CRCC - 72
சம்பளம்: மாதம் ரூ.18,000
3. Accounting cum Supporting Staff - 12
சம்பளம்: மாதம் ரூ.14,400
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
1.BURCC பணிக்கு முதுகலை அல்லது இளங்கலை அல்லது ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: ஆசிரியர் பணியில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. CRCC பணிக்கு பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Accountant cum supporting staff பணிக்கு Commerce பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: Accountanting துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://edudel.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://edudel.nic.in/upload_2013_14/1069_dt_03062014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment