Tuesday, 10 June 2014

BEL நிறுவனத்தில் கிளார்க் மற்றும் கணினி ஆபரேட்டர் பணி

இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Clerk-cum-computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
பணி: Clerk-cum-computer-operator
கல்வித் தகுதி: மூன்று வருட டிப்ளமோவில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிதல் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். 
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 8740 - 3% - 22150 + நிர்வாக விதிகளின் படி சில சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.300. SC/ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதேபோன்று  A4 அளவு வெள்ளைத் தாளில் தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR),
Bharat Electronics Limited,
Corporate Office, Outer Ring Road Nagavara,
Bangalore-560045
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment