தெற்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1532 Primary Teacher, Nursery Teacher , Special Educator மற்றும் Counselor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1532
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary) - 800
2. Teacher (Nursery) - 120
3. Special Educator (Primary) - 588
4. Counselors - 24
கல்வித் தகுதி:
1. Primary Teacher பணிக்கு 1. +2 தேர்ச்சி பெற்று ஆசிரியர் பயிற்சியில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது B.Ed. முடித்திருக்க வேண்டும் CBSE நடத்தும் CTET தேர்வில் தாள்-1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.Teacher (Nursery) பணிக்கு +2 முடித்து ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது B.Ed. முடித்திருக்க வேண்டும்
3. Special Educator பணிக்கு +2 தேர்ச்சி பெற்று 2 வருட சிறப்பு கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். CBSE நடத்தும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
4 Counselors பணிக்கு உளவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினர் 18 முதல் 30க்குள்ளும், SC,ST பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினர் 18 முதல் 33க்குள்ளும், மற்ற பிரிவினர்கள் 18 முதல் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது..
A. Secondary Examination : 25 %
B. Sr. Sec. Examination : 45%
C. Teacher Training : 30%
Total Weightage/Marks : 100 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் 27,000.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். SC,ST,PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.mcdonline.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தில் அனைத்தும் துல்லியமான விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் பொருத்தமான இடத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mcdonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment