மத்திய அரசின் மனிதவளத் துறையின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் தேசிய வார்ப்பிணைப்பு நிறுவனத்தில் Foundry technology, Forge Technology, Manufacturing Engineering, Materials and Metallurgical Engineering, Applied Science and Humanities ஆகிய துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 57 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: உதவி பேராசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் எம்.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்.டி. படிப்பு இருந்தால் விரும்பத்தக்கது.
இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு பி.எச்.டி., படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை ராஞ்சியில் மாற்றத்தக்க வகையில் 'NIFFT' என்ற பெயரில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.250, பெண்களுக்கும், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
NIFFT,
Hatia, Ranchi 834 003
Jharkhand.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nifft.ernet.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment