அரியானா செயல்பட்டு வரும் தேசிய நீர்மின் நிலைய நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செக்ரட்டரி பணியிடங்களை நேர்முகத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Company Secretary Professional-FTB.
காலியிடங்கள்: 05
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.16,500 வழங்கப்படும்.
தகுதி: பட்டப்படிப்பு மற்றும் Institute of Company Secretaries of India-வில் Membership பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: NHPC Corporate Office, Faridabad.
வயதுவரம்பு: 01.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு பணி வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.05.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
NHPC Office Complex, Sector-33, Faridabad-121003, Haryana.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் முறை: தகுதியானவர்கள் www.nhpcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை 4 செட் பதிவிறக்கம் செய்து ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.nhpcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment