தமிழக அரசின் தொழிற்நுட்ப கல்வி இயக்குநனரகத்தால் நடத்தப்படும் Office Automation தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வின் பெயர்: Certificate Course in Computer On Office Automation (June-2014)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழி தட்டச்சில் இளநிலை அல்லது முதுநிலை தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு நிதியுடன் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 120 மணி நேரம் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் தட்டச்சு பயிற்சி மையங்களில் குறைந்தது 120 மணி நேரம் தட்டச்சு பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு பற்றிய விவரம்:
தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
Paper-I Theory Exam
Paper-II Practical Exam
Theory Exam நடைபெறும் தேதி: 28.06.2014
Practical Exam நடைபெறும் தேதி: 29.06.2014
இரண்டு தாள்களும் தலா இரண்டு மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கு தேவையான பணினி மற்றும் இதர பொருட்கள் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம்: ரூ.350. இதனை The Additional Director of Technical Education (Exam), Chennai -25 என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்தவும்.
தனியார் பயிற்சி மையங்களில் தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் அந்த பயிற்சி மையத்தின் மெயர், முகவரியை டி.டி.யின் பின்புறம் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tndte.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வேண்டிய சான்றிதழ் நகல்கள் விவரம்:
01. விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.
02. பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல்கள்.
03. சமீபத்திய ஓரே மாதிரியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்று அதிலி ஒன்று விண்ணப்பத்துடன்
ஒட்டவும், மற்றொன்று Hall Ticket-ல் ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் கையெப்பம் பெற்று அனுப்பவும். மூன்றாவது புகைப்படத்தை ஒரு சிறிய கவரில் வைத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும். சான்றிதழ் நகல்கள் அனைத்து அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Director of Technical Education (Exam), Chennai - 25.
No comments:
Post a Comment