பொறியியல் தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு நிறுவனமான Project & Development India Limited (PDIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Resident Engineers (Mechanical)
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 30.04.2014 தேதியின்படி 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical Engineering துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். Site Supervisor ஆக ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: Projects & Development India Ltd., PDIL Bhawan, A-14, Sector-1, Noida - 201301, PH: 0120-2529842.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.05.2014 - 30.05.2014
நேரம்: காலை 9.30 மணி வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Net Banking/Debit Card/Credit Card/Bank Transfer முறையில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
SC/ST பிரிவினர் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.pdilin.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அட் எடுத்து நேர்முகத்தேர்விற்கு வரும்போது கொண்டு வரவும். தேவையான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள் கொண்டு வரவேண்டும்.
மேலும் நேர்முகத்தொடர்பான தகவல்கள் தங்களுடைய மின்னஞ்சல் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே தொடர்ந்து மின்னஞ்சல் மற்றும் இணையதளத்தை கவனித்து வரவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2014
No comments:
Post a Comment