Sunday, 30 November 2014

இந்தியன் ஆயில் கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

அரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Officer (Chemistry)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Officer (Bio technology)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்டிரி, பயோ சயின்சஸ், பயோ கெமிக்கல், பயோ புராசசஸ் போன்ற ஏதாவதொரு பொறியியல் துறையில்  முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Officer (Automotive Research)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையான மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Research Officer (Chemical Engineering)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Research)/ Senior Research officer
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பொறியியல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Chief Research Manager/ Senior Research Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்:
சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.51,300 - 73,000.
சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 - 66,000.
தகுதி: பரிசோதனை இயற்பியலில் அல்லது உடலியக்க வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chief Research Manager/ Senior Research Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம்ரூ.51,300 - 73,000.
சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 - 66,000.
தகுதி: ஆர்கானிக் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவை 30.09.2014 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பி.இ., மற்றும் எம்.இ. படிப்புகளில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ தகுதி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை 'Indian OIL Corporation Limited, R - D Centre, Faridabad' என்ற பெயருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் (பரிதாபாத் கோட் எண்: 10449) டி.டி.யாக செலுத்தவும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Indian OIL Corporation Ltd.,
R -D Centre, Post Box.No: 720,
Escorts Nagar Post Office,
Faridabad 121007.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பயிற்சி இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களில் பணி

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வரும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநரகத்தில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2498 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2498
துறைவாரியான காலியிடங்கள் விரம்:
1. Fitter - 138
2. Welder (Gas & Electric) - 149
3. Sheet Metal Worker - 09
4. Turner - 91
5. Machinist - 81
6. Machinist (Grinder) - 14
7. Foundry man - 07
8. Tool & Die Maker (Die & Molds) - 01
9. Tool & Die Maker (Press Tools, Ziks and Pictures)- 06
10. Carpenter- 06
11. Plumber - 75
12. Draftsman (Mechanical)- 72
13. Mechanical (Motor Vehicle)- 62
14. Mechanic (Tractor) - 51
15. Mechanic (Diesel)- 19
16. Mechanic Agriculture Machinery - 06
17. Mechanic (Repair & Maintenance of two-wheeler vehicles)- 09
18. Painter (General) - 76
19. Surveyor - 10
20. Draftsman (Civil)- 61
21. Mechanic (Refrigeration & Air Conditioner)- 144
22. Engineering Drawing - 60
23. Workshop Calculation & Science - 49
24. Workshop Calculation & Science/ Engineering Drawing - 117
25. Electrician - 212
26. Wireman - 73
27. Electronics Mechanic - 112
28. Information Technology & Electronics System Maintenance - 92
29. Instrument Mechanic - 16
30. Secretarial Practice - 04
31. Stenography (Hindi) - 51
32. Stenography (English) - 10
33. Hair & Skin Care - 105
34. Cutting Sewing - 53
35. Dress Making - 86
36. Embroidery & Needle Work - 14
37. Fashion Technology - 128
38. Computer Operator & Programming Assistant (Copa) - 114
39. Plastic Processing Operator - 07
40. Upholestar - 02
41. English Language - 01
42. Hindi Language - 27
43. Car/ Truck Driving - 08
44. Employability Skill- 35
45. I.T. Lab Director- 35
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.100. SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதனை Debit card/Credit card/Net Banking மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.gitianudeshakup.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2014
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.gitianudeshakup.in/Vigyapan%20Anudeshak.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 29 November 2014

நர்சிங் முடித்தவர்களுக்கு 929 ரயில்வேயில் பணி

இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
நிறுவனம் இந்திய ரயில்வே அமைச்சகம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 929
தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தை பார்க்கவும்.
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ஸ்டாஃப் நர்ஸ் - 438
2. ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேட்-3 - 227
3. பார்மஸிஸ்ட் கிரேட்-3 - 168
4. இ.சி.ஜி டெக்னீசியன் - 06
5. ரேடியோகிராபர் - 03
6. லேப் அஸிஸ்டெண்ட் கிரேட்-2 - 26
7. லேப் சூப்பரின்டெண்டன்ட் கிரேட்-3 - 31
8. ஹீமோ டயாலிஸஸ் டெக்னீசியன் - 01
9. கார்டியாலஜி டெக்னீசியன் - 04
10. ஆடியோலாஜிஸ்ட் கம் ஸ்பீச்தெரபிஸ்ட் - 01
11. பிசியோதெரபிஸ்ட் - 09
12. டிஸ்ட்ரிக் எக்ஸ்டன்சன் எஜூகேட்டர் - 03
13. டயட்டீசியன் - 03
14. ஆப்தமாலஜிஸ்ட் - 01 போன்ற பல்வேறு பணிகள்.

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி

காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 684 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 684
பணி: உதவியாளர்
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. SC - 95
2. ST - 61
3. OBC - 164
4. General - 364
சம்பளம்: மாதம் ரூ 7,640- 21.050
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.75. ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.450.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://uiic.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2014
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2015 முதல் வாரத்தில்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 28 November 2014

CSPHCL நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி

சத்தீஸ்கர் மாநிலம் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் (CSPHCL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 132 Junior Engineer  (T&D) / (Civil)-Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 132
பணி: Junior Engineer (JE)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 124
2. Information Technology - 02
3. Computer Science - 02
4. Civil - 04
சம்பளம்: மாதம் ரூ 12.775 - 38.400. 12 மாத பயிற்சியின்போது ஊக்கத்தொகையாக மாதம் ரூ.12.775
கல்வித்தகுதி: Electrical, IT, Computer Science, Civil துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது, ஓபிசி - ரூ.700.
SC,ST பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.cseb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2014
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cseb.gov.in/csphcl/recruitment/JE%2005112014/Advt-JE.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 27 November 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லியில் அரசு பணி

தில்லியில் செயல்பட்டு வரும் டிஎஸ்எஸ்எஸ்பி எனும் தில்லி துணைநிலை சேவை பணியாளர் தேர்வு வாரியம் தில்லி அரசு துறையில் காலியாக உள்ள டையர் என்னும் முதல்நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டையர் 1 எனும் முதல்நிலை
காலியிடங்கள்: 101
தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியல், வணிகவியல், பெீருளாதாரம், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மொழிப்பாடங்களான ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம் போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் பணி

இந்திய ராணுவத்தில் ப்ளஸ் டூ டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீமில் ஐந்து வருட பயிற்சிக்குப் பின் டெக்னிக்கல் துறையில் பணியாற்றுவதற்கான தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 90
தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களைக் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 161/2 முதல் 19 1/2 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www..joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 26 November 2014

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் அசிஸ்டென்ட் சர்ஜன் பணி

தமிழகத்தில் உள்ள ஏரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 1727 அசிஸ்டென்ட் சர்ஜன் (ஸ்பெஷாலிட்டி) பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 07ய2014
பணி: Assistant Surgeon (Speciality)
காலியிடங்கள்: 1727
சம்பளம்: 15, 600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிபிஎஸ் முடித்து சம்மந்தப்பட்ட சிறப்பு பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது DNB முடித்திருக்க வேண்டும். சிறப்பு பிரிவுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் மருத்துவராக பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடம் House Surgeon ஆக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.375. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி: 01.12.2014
வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கர்நாடகாவில் ரூபாய் நோட்டு தொழிற்சாலையில் அதிகாரி பணி

கர்நாடகா மாநிலம், மைசூரில் விரைவில் அமையவுள்ள பேங்க் நோட் பேப்பர் ஆலையிலும், பெங்களூர் கார்ப்பரேட் அலுவலகத்திலும் காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பொது மேலாளர்: (நிதி மற்றும் கணக்கு)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400.

பணி: மேலாளர்: (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.30,420.

பணி: செக்யூரிட்டி மற்றும் புரோடோகால் அதிகாரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,420.

பணி: துணை மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,200.

பணி: நிர்வாக செயலாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.17,640

பணி: ஆபீசர் (தகவல் தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.17,640.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன் அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முதுகலை பட்டதாரிகளுக்கு அரசு பணி

தில்லியில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எஸ்.எஸ்.பி எனும் தில்லி துணை நிலை சேவை பணியாளர் தேர்வு வாரியத்தின் தில்லி அரசு துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டையர் 1 எனும் முதல்நிலை பணி
காலியிடங்கள்: 101
தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிப் பாடங்களில் முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி: 29.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிரெட்ஜிங் கழகத்தில் பணி

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Dredging Corporation of India நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Trainee Electrical Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரஎண்: 5/2014
பணி: Trainee Electrical Officers
காலியிடங்கள்: 20
உதவித்தொகை: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: +2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tuesday, 25 November 2014

1727 தாற்காலிக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்கள்: விண்ணப்பிக்க டிச.1 கடைசி

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு 1727 தாற்காலிக உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மண்டல மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் அடிப்படையில் 2,176 பணியிடங்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களை காலிப்பணியிடங்கள் தாற்காலிக முறையில் நிரப்பப்படவுள்ளது.

டிப்ளமோ தகுதிக்கு இந்திய ராணுவத்தில் அதிகாரி பணி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புனேயில் செயல்பட்டு வரும் டிஃபென்ஸ் எஸ்டேட் டிபார்ட்மென்ட் பிரிவில் நிரப்பப்பட உள்ள சப் டிவிஷனல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி: சப் டிவிஷனல் அதிகாரி - 01
தகுதி: சிவில் துறையில் பட்டம் அல்லது அதே துறையில் அனுபவத்துடன் கூடிய டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: கிரேட் 3 சப் டிவிஷனல் அதிகாரி - 24
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வே மற்றும் டிராஃப்ட்ஸ்மென் துறையில் டிப்ளமோ முடுத்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள், தேர்வு கட்டணங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dgde.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஐடிஐ தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் பணி

கொல்கத்தாவிலுள்ள கலங்கரை விளக்க அலுவலகத்தில் காலியாக உள்ள Lighthouse Attendant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lighthouse Attendant
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician, Electronics Mechanic/Radio & Television Mechanic பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்த தேர்வு, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of the Director, Directorate of Lighthouses and Lightships, Ministry of Shipping, "Deep Bhavan" D - 372/2, Taratala Road, Kolkata - 700088.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dgll.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 24 November 2014

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னையில் பல்லவன் இல்லச் சாலையில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருக்கும் 776 சேம ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 260 பணியிடங்களும், திருச்சி மண்டலத்தில் 256 பணியிடங்களும், நாகர்கோவில் மண்டலத்தில் 260 பணியிடங்களும் காலியாக உள்ளன.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் 746 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 610 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதுபோல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் 899 சேம ஓட்டுநர், 702 சேம நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 259 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 409 சேம நடத்துநர் பணியிடங்களும், கும்பகோணம் மண்டலத்தில் 181 சேம ஓட்டுநர், 37 சேம நடத்துநர் பணியிடங்களும், விழுப்புரம் மண்டலத்தில் 256 சேம ஓட்டுநர், 295 சேம நடத்துநர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 280 சேம ஓட்டுநர், 278 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 19
பணி: உதவி பேராசிரியர்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnfu.org.in/university/wp/?page_id=5328 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மீன்வள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் பணி

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2014
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது M.F.SC பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரரின் அனைத்து தகுதிகளும் 31.10.2014 தேதியின்படி நிர்ணியிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை The Finance Officer, Tamil Nadu Fisheries University, Nagapattinam என்ற பெயருக்கு குறுக்கு கோடிட்ட டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிரக்கும் முறை: www.tnfu.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, TamilNadu Fisheries University, Nagapattinam - 611001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.12.2014

Sunday, 23 November 2014

மருந்து ஆராய்ச்சித் துறையில் டெக்னிக்கல் பணி

மத்திய அரசின் கீழ் ஜம்மு மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசின் எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 14
பணி:  
1. டெக்னிக்கல் உதவியாளர் - 06
தகுதி: பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் - 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபார்மஸி துறையில் டிப்ளமோ அல்லது தொடர்பான படிப்புகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு கட்டணங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iiim.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

ஏர் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் வடக்கு அல்லது தெற்கு மண்டலங்களில் ஏதேனும் ஒரு மண்டலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: Trainee Cabin Crew
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்:
தெற்கு மண்டலம் - 40
வடக்கு மண்டலம் - 121
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Hotel Management & Catering Technology-ல் 3 வருட பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் Airline or Hospitality Services பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மொழி அறிவு: இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பலமை பெற்றிருக்க வேண்டும். (அயல்நாட்டு மொழி தெரிந்திருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்)

கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் அமர்நாத்தில் செயல்பட்டு வரும் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow (JRF), Senior Research Fellow (SRF) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow (JRF)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.16,000. இரண்டாம் வருடம் மாதம் ரூ.18,000.
பணி: Senior Research Fellow (SRF)
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
உதவித்தொகை: ரூ.18,000
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டலார்ஜி, எம்.எஸ்சி கம்பியூட்டர், இயற்பியல், உயிர் உயிரியல், உயிர் வேதியியல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.10. இதனை Indian Postal Order-யாகDirector, NMRL, Ambernath பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,OBC பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_490_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கப்பல்துறை அமைச்சகத்தில் கலங்கரை விளக்கம் பணியாளர் பணி

இந்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்கு இயக்குநகரத்தில் கலங்கரை விளக்கம் பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: EN 28/52(2-Estt(14)/2014,dtd 06.08.14)
பணி: கலங்கரை விளக்க பணியாளர்
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: +2 அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director, Directorate of Lighthouses and Lightships, Ministry of Shipping, "Deep Bhavan" D-372/2, Taratala Road, Kolkata-700088.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/LHA.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 22 November 2014

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள காந்திகிராம் சமுதாய கல்லூரியில் ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு வருகின்ற 24 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: ஆய்வக உதவியாளர்
தகுதி: மொக்கானிக் துறையில் டிப்பமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அலுவலக உதவியாளராக பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2014
நேரம்: பிற்பகல் 3 மணி.
இடம்: Depatment of Lifelong Learning & Extension, Gandhigram Community College, Gandhigram Rural Institute-Deemed University, Gandhigram-624302, Dindugul District, Tamil Nadu, Mobile No: 9443677457, 9443024310

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி

தமிழ அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி குறியீடு: 14PG
அறிக்கை வெளியிடப்பட்ட தேதி: 07.11.2014
மொத்த காலியிடங்கள்: 1,807
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
* தமிழ் - 277
* ஆங்கிலம் - 209
* கணிதம் - 222
* இயற்பியல் - 189
* வேதியியல் - 189
* தாவரவியல் - 95
* விலங்கியல் - 89
* வரலாறு - 198
* பொருளியல் - 177
* வணிகவியல் - 135
* உடற்கல்வி - 27
பணி: முதுகலை பட்டதாரி ஆசிரியர்
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250. இதனை STATE BANK OF INDIA, INDIAN OVERSEAS BANK, INDIAN BANK-ன் ஏதாவதொரு கிளையில் விண்ணப்ப கட்டணத்திற்கான செலானை பூர்த்தி செய்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரக்கள் தங்களது மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான செலான் இணைக்கப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.