வடமேற்கு மாநிலங்களின் மத்திய அரசு அலுவலகங்களின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: முதுநிலை நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது நூலக அறிவியல் பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (நீர் அளவியல்)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வானிலை ஆய்வியல், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், கணிதம், புள்ளியியல் ஆகிய ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (புவி இயற்பியல்)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு:15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:புவி இயற்பியல் அல்லது பயன்பாட்டு புவி இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:(கெமிக்கல்)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் அல்லது வேளாண்மை வேதியியல் அல்லது மண் அறிவியல் ஆகிய ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: புலனாய்வாளர்
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது பொருளியல் அல்லது வணிகவியல் ஆகிய ஏதேவதொரு துறையில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்..
விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இதனை 'சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப்' மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள், பணியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sscnwr.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Regional Director (NWR),
Staff Selection Commission,
Block.No: 3, Kendryia Sadan, Sector9,
Chandigarh 160 017.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2014.
No comments:
Post a Comment