ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாவியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த இந்திய மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.
பணி:டெக்னிக்கல் அசிஸ்டென்ட் குருப் - 3
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கிராம பொருளியல், தாவர இனப்பெருக்கம், தாவரவியல்/ உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், வேதியியல் போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறை ரீதியான பிரிவில் ஓராண்டு தொழில்நுட்ப தகுதியும். நூலக அறிவியல் பாடத்துடன் ஏதாவதுதொரு அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் 3 வருட முழு நேர டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னீசியன் குருப் - 2
காலியிடங்கள்: 08
வயது: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பார்மசி துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது கணினியில் 2 வருடம் முழு நேர அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேளாண்மை துறையில் 2 வருட முழு நேர அப்ரன்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CSIR INDIAN INSTITUTE OF INTEGRATIVE MEDICINE,
Canal Road,
Jammu Tawi,
JAMMU - KASHMIR 180001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iiim.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment