ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் வடக்கு அல்லது தெற்கு மண்டலங்களில் ஏதேனும் ஒரு மண்டலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: Trainee Cabin Crew
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்:
தெற்கு மண்டலம் - 40
வடக்கு மண்டலம் - 121
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Hotel Management & Catering Technology-ல் 3 வருட பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் Airline or Hospitality Services பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மொழி அறிவு: இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பலமை பெற்றிருக்க வேண்டும். (அயல்நாட்டு மொழி தெரிந்திருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏதாவதொரு மண்டலத்தில் Group Dynamics & Personality Assessment Test (GD & PAT) நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.airinsia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
வடக்கு மண்டலம்:
General Manager (Personnel)
Air India Limited, Northern Region, Admin Building, Opposite Post Office, IGI Airport, Terminal-1, New Delhi - 110037
தெற்கு மண்டலம்:
General Manager (Personnel)
Air India Limited, Southern Region,
Airlines House, Meenambakkam, Chennai - 600027
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airinsia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment