Monday, 5 January 2015

பிஇஎம்எல் நிறுவனத்தில் டெக்னீசியன் டிரெய்னி பணி

பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) நிறுவனம் ரயில் கோச்களைத் தயாரித்தல், சுரங்கப் பணிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக 1964ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் Lab Technician Trainees, Office Assistant Trainees பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: KP/S/02/2014
மொத்த காலியிடங்கள்: 06
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Lab Technician Trainees - 01
2.Office Assistant Trainees - 05
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2015
மேலும் கல்வித்தகுதி, அனுவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bemlindia.com/documents/jobs/Advt_KP_S_2_2014_PWD.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment