Tuesday, 6 January 2015

பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் ஆசிரியர் பணி

இந்திய ராணுவ கல்விப் பிரிவில் அறிவியல் மற்றும் கலை பிரிவு பட்டதாரிகளிடமிருந்து ஹவில்தாராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 437 (அறிவியல் பிரிவு - 299, கலைப்பிரிவு - 138)
வயது வரம்பு: 10.01.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும். 'ரீ மஸ்டர்ட்' பிரிவு விண்ணப்பதாரர்கள் 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 
அ. அறிவியல் பிரிவு:
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதாவதொரு துறையில் எம்.எஸ்சி, பிஎஸ்சி, எம்சிஏ, பிசிஏ, பி.டெக்., பி.எஸ்சி (ஐடி) முடித்திருக்க வேண்டும்.

ஆ. கலைப்பிரிவு:
ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், உளவியல், சமூகவில் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் டெஸ்ட் மற்றும் மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல ஆள்சேர்ப்பு மையத்திலோ அல்லது தில்லியிலுள்ள தலைமை அலுவலகத்திலோ 22.02.2015 தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் குரூப் எக்ஸ் பிரிவிலோ (பிஜி/ யுஜியுடன் பி.எட்) அல்லது குரூப் ஒய் பிரிவிலோ ஹவில்தாராக பணியமர்த்தப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
HQ Rtg Zone,
Fort Saint George,
CHENNAI 600009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உடற்தகுதிகள் போன்ற முழுமையன விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment