Sunday, 15 February 2015

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

இந்திய அரசின் அணு சக்தி துறையின் கீழ் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
மொத்த காலியிடங்கள்: 45
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Plant Operation  - 25
2. Laboratory - 03
3. Basic Science (HP) - 02
தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களைக் கொண்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Fitter - 07
5. Electrical - 02
6. Electronics - 02
தகுதி: 60 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: எஸ்சி  பிரிவினருக்கு 23.02.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினருக்கு 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: இரண்டு வருடம்.
உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் வருடத்தில் மாதம் ரூ.6,200, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.7,200 வழங்கப்படும்.
வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு TECHNICIAN/C பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
TECHNICIAN/B பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer-III, NRB, Bhabha Atomic
Research Centre Facilities, Kalpakkam – 603 102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://barc.gov.in/careers/vacancy242.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment