இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) நிரப்பப்பட உள்ள 233 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 233
பணி: உதவியாளர்
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Ahmedabad - 04
2. Bangalore - 75
3. Hyderabad - 24
4. New Delhi - 04
5. Sriharikota - 54
6. Thiruvananthapuram - 72
வயது வரம்பு: 07.08.2014 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 31க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 29க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கலை, சந்தையியல், மேலாண்மை, அறிவியல்,கணினி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5,200. 20,200 + தர ஊதியம் ரூ. 2,400.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 32034064593 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும். ((இஸ்ரோ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்)
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Administrative Officer (ICRB),
ISRO Headquarters, Antariksh Bhavan,
New BEL Road, Bangalore 560094
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.isac.gov.in/CentralOCB-2014/advt.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment