Thursday, 17 July 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் ராக்கெட் தளத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 26
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02  (பொது - 1, ஒபிசி - 1). தகுதி:
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03 (பொது - 2, எஸ்சி - 1)
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடம்: 01 இடம் (எஸ்டி).
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கெமிக்கல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01 (எஸ்டி).
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் போட்டோகிராபி, சினிமாட்டோகிராபி போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02 இடம் (ஒபிசி).
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 04 (ஒபிசி - 2, பொது - 2).
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01 (பொது)
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் மேலும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02 (பொது - 1, ஒபிசி - 1).
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட்:
காலியிடங்கள்: 01 (ஒபிசி)
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 17.-7.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: கேட்டரிங் சூபர்வைசர்
காலியிடங்கள்: 011 இடம் (பொது).
கல்வித்தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பட்டம் பெற்று ஒரு வருட அனுபவம். அல்லது கேட்டரிங் துறையில் 3 வருட டிப்ளமோ மற்றும் 3 வருட முன் அனுபவம் அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலை டிப்ளமோ மற்றும் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சப் ஆபீசர்:
காலியிடங்கள்: 01 (பொது)
தகுதி: முன்னணி தீயணைப்பு வீரர், டிரைவர் மற்றும் ஆபரேட்டராக நாக்பூர் தேசிய தீயணைப்பு சேவை ஆணையத்தில் 6 ஆண்டுகள் முன் அனுபவம், சப் ஆபீசர் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெங்களூர், டெல்லி, லக்னோ, கோவா, கொல்கத்தா, புவனேஸ்வர், மும்பை, சென்னை ஆகிய மண்டல தீயணைப்பு சேவை ஆணையங்கள் ஏதேனும் ஒன்றில் சப் ஆபீசர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் தேர்ச்சி பெற்று நாக்பூர் தேசிய தீயணைப்பு சேவை ஆணையத்திலோ அல்லது பெங்களூர், டெல்லி, லக்னோ, கோவா, கொல்கத்தா, புவனேஸ்வர், மும்பை, சென்னை ஆகிய மண்டல தீயணைப்பு சேவை ஆணையங்களிலோ 2 ஆண்டு தீயணைப்பு பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 17.7.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆரம்பபள்ளி ஆசிரியர்:
காலியிடங்கள்: 05 (பொது - 3, எஸ்சி - 2)
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஆங்கிலம் மற்றும் இந்தியில் கற்றுக் கொடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 17.07.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.shar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2014.

No comments:

Post a Comment