மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) காலியாக உள்ள 1,203 கான்ஸ்டபிள், ஒட்டுநர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 1203.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. கான்ஸ்டபிள்/ டிரைவர் - 743 நிரப்பப்படாத நேரடி பணியிடங்கள்
2. கான்ஸ்டபிள்/ டிரைவர் - 308 முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கான்ஸ்டபிள்/ ஒட்டுநர்: - தற்போது ஏற்பட்டுள்ள நேரடி பணி நியமன இடங்கள் - 137
4. கான்ஸ்டபிள், ஒட்டுநர்: - தற்போது ஏற்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான பணியிடங்கள் - 15.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.
வயது வரம்பு: 19.07.2014 தேதியின்படி 21 - 27க்குள் வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக மோட்டார் வாகனம் அல்லது போக்குவரத்து வாகனம், இலகுரக மோட்டார் வாகனம், கியர் உள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஓட்டுவதற்கான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதிகள்: உயரம் 167 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கான உயரம்: 160 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீட்டரும் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடல் அளவுகள் சரிபார்ப்பு, உடல் திறனறி தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முன்னாள் ராணுவத்தினருக்கு உடல் தகுதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இதனை கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக Assistant Commandant/DDO CISF South Zone, Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DIG, CISF, (South Zone),
Rajaji Bhawan,
'D' Block, Besant Nagar,
CHENNAI 600 090.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திடிடங்கள் போன்ற முஎழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment