Thursday, 10 July 2014

டிப்ளமோ, பிஇ தகுதிக்கு தேசிய கட்டுமான கழகத்தில் பணி

தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கட்டுமான கழகத்தில் (NBCC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பி.இ, டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 75
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் எக்சிக்யூடிவ் இயக்குநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.62,000 - ரூ.80,000.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்து சம்பத்தப்பட்ட துறையில் 24 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
பணி: பொது மேலாளர் - 04 
சம்பளம்: மாதம் ரூ.36,600 - ரூ.62,000.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்து சம்பத்தப்பட்ட துறையில் 15 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 49க்குள் இருக்க வேண்டும்.
பணி: கூடுதல் பொது மேலாளர் (சிவில்) - 03
சம்பளம்: மாதம் ரூ.32,900 - ரூ.58,000.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்து சம்பத்தப்பட்ட துறையில் 12 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை பொது மேலாளர் - 10
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பி.இ முடித்து சம்பத்தப்பட்ட துறையில் 9 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 41க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை பொது மேலாளர் - 03
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பி.இ முடித்து சம்பத்தப்பட்ட துறையில் 9 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: திட்ட மேலாளர் (சிவில்) - 15
சம்பளம் மாதம் ரூ.24,900 - ரூ.50,500.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பி.இ முடித்து ரியல் எஸ்டேட், உள் கட்டமைப்பு துறையில் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை திட்ட மேலாளர் (சிவில்) - 06
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.46,500.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பி.இ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை திட்ட மேலாளர் (எலக்ட்ரிக்கல்) - 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.46,500.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை மேலாளர் (Architecture of Planning) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.46,500.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் Architecture பிரிவில் பி.இ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: இளநிலை பொறியாளர் (சிவில்) - 20
சம்பளம்: மாதம் ரூ.9,760.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: பொது மேலாளர் (நிதி) - 02
சம்பளம்: மாதம் ரூ.36,600 - ரூ.62,000.
கல்வித்தகுதி: சிஎ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 49க்குள் இருக்க வேண்டும்.
பணி: கூடுதல் பொது மேலாளர் (நிதி) - 02
சம்பளம்: மாதம் ரூ.32,900 - ரூ.58,000.
கல்வித் தகுதி: சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை பொது மேலாளர் (நிதி) - 06
சம்பளம்: மாதம் ரூ.29,100 - ரூ.54,500.
கல்வித் தகுதி: சிஏ, ஐசிடபிள்யூஏ அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: கூடுதல் பொது மேலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - ரூ.58,000.
கல்வித் தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ முடித்து மேனேஜ்மென்ட் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்து 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: துணை பொது மேலாளர் - 01
கல்வித் தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ மற்றும் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்து 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 41க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேலாளர் (HRM)
தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ மற்றும் மேனேஜ்மென்ட் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 41க்குள் இருக்க வேண்டும்.
பணி: டெபுடி மேனேஜர்: (மனிதவளத்துறை) - 02
சம்பளம்: ரூ.20,600 - ரூ.46,500.
கல்வித் தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ போன்ற  ஏதாவதொன்றில் பட்டம் பெற்று மனிதவளத்துறை, பெர்சனல் மேனேஜ்மென்ட், தொழில் உறவுகள் ஆகிய துறைகளில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - ரூ.58,000.
கல்வித் தகுதி: சட்டம் மற்றும் வழக்கறிஞராக பதிவு செய்து 12 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: இளநிலை இந்தி மொழிப்பெயர்ப்பாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.9,760.
தகுதி: ஆங்கிலத்துடன் இந்தியில் முதுகலை பட்டம் அல்லது இந்தியுடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: புராஜக்ட் மேலாளர் (சிவில்) - 01 (காது கேளாதோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
சம்பளம்: ரூ.24,900 - ரூ.50,500.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பிஇ மற்றும் 6 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 37க்குள்.
பணி: இளநிலை பொறியாளர் (சிவில்) - 01 (காது கேளாதோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.9,760.
கல்வித் தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்
பணி: துணை மேலாளர் (மனிதவளம்) - 01 (பார்வை குறைபாடு உடையோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
சம்பளம்: ரூ.20,600 - ரூ.46,500.
கல்வித் தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ பட்டம் அல்லது எச்ஆர்எம், பிஎம், ஐஆர் ஆகிய பிரிவுகளில் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர் (HRM) - 01 (பார்வை குறைபாடு உடையோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.16,400 - ரூ.40,500.
கல்வித் தகுதி: எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ பட்டம் அல்லது மேனேஜ்மென்ட் துறையில் 2 வருட முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் ஸ்டெனோகிராபர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,760.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஸ்டெனோகிராபர் பணியில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், இந்தியில் 40 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆபீஸ் அசிஸ்டென்ட் (ஸ்டெனோகிராபர்) - 03
சம்பளம்: மாதம் ரூ.7,300.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்..
வயது வரம்பு: 22க்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு 11.07.2014 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஸ்டெனோகிராபர், பொறியாளர், ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கு ரூ.500. இதர பணிகளுக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. இதனை NBCC Ltd என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்த வகையில் டி.டியாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of the Executive Director (HRM),
NBCC Limited, NBCC Bhawan,
Lodhi Road, NEW DELHI,
PIN: 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014.
மேலும் மாதிரி விண்ணப்பம் விரிவான கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment