Thursday, 10 July 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வே நிறுவனத்தில் பொறியாளர் பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centre for Railway Information Systems (CRIS) என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Software Engineer (ASE) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Software Engineer (ASE)
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: Computer Science, Computer Tech, Information Tech, Computer Application போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Network Engineer (ANE)
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு GATE 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15.07.2014 தேதியின்படி 22 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: இரு பணிகளுக்கும் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.crisrecruitment2014.org.in அல்லது www.cris.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment