இந்திய விமானப்படையின் Flying பிரிவு, Technicalமற்றும் Ground Duty பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின்னர் பணியில் சேருவதற்கான AFCAT-02/2014 தேர்வு எழுத தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Flying Branch: 198/15F/SSC/W
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 19 - 23க்குள் இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் (DGCA) உரிமம் உள்ளவர்களாக இருப்பின் உச்ச வயதுவரம்பில் 25க்குள் (திருமணமாகாதவராக) இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
+2 வில் இயற்பியல், கணிதப் பாடங்களை படித்தவராக இருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 4 வருட பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் 15.06.2015 தேதிக்கு முன்னதாக தகுதி சான்றதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Technical Branch: 197/15T/SSC/W
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Aeronautical Engineer (Electronics) AE(L)
பணிக்கு: 4 வருட பி.இ அல்லது பி.டெக் அல்லது Institute of Engineers-ஆல் நடத்தப்படும் Associate Membership தேர்வு அல்லது Aeronautical Society of Indiaவால் நடத்தப்படும் தேர்வு Institute of Electronics & Telecommunication Engineers ஆல் Graduate Membership தேர்வின் ஏ மற்றும் பி பரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, முழுமையான கல்வித்தகுதி, உடற்தகுதி, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment