108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான தேர்வு முகாம் மயிலாடுதுறையில் வியாழக்கிழமை (செப். 18) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்ட மேலாளர் ஏ. ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள், பயிற்சியாளர்கள், ஓட்டுநர் நேரடி தேர்வு முகாம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள சி.சி.சி பாராமெடிக்கல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
மருத்துவ உதவியாளர்களுக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் (உடற்கூறியல், முதலுதவிகள், அடிப்படை செவிலியர் பணிகள் தொடர்பானவை, மனிதவளம் குறித்தவை) நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி, தினசரி உணவுப்படி ரூ. 100 வழங்கப்படும்.
ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க 10-ம் வகுப்பு படித்தவர்களாகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாகவும், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28888060, 75, 76, 77, 78 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment