இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot/Observer பணிகளில் சேர திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Pilot/Observer
Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Observer பணிக்கு இரு பாலாரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் +2 வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். 02.07.1991க்கும் 01.07.1996க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இருதேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதி: உயரம்: ஆண்களுக்கு குறைந்டபட்சம் 162.5 செ.மீட்டரும், பெண்களுக்கு 152 செ.மீட்டரும்.
கண்பார்வை: 6/6, 6/6 என்ற அளவில் தெளிவான பார்வை திறனை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு எஸ்எஸ்பி நடத்தும் தேர்வுக்கு ்ழைக்கப்படுவார்கள். தேர்வு 2014 டிசம்பர் முதல் 2015 மார்ச்
மாதத்திற்குள் பெங்களூரில் வைத்து நடத்தப்படும். இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடைபெறும். விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனி விண்ணப்ப படிவும் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 13.10.2014
ஆன்லைன் விண்ணப்ப படிவு நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box N.02, Sarojini Nagar, New Delhi - 110023.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment