பொது துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள டீலர் மற்றும் ஈக்விட்டி ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் விவரங்கள்:
பணி: Dealer (Specialized Segment) - 10
தகுதி: நிதியியல், கணிதம், புள்ளியில், வணிகவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MBA,PGDBM முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.
பணி: Equity Research Analyst - 01
தகுதி: பொருளியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ (நிதியியல்) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 - 43க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRPA201415EnglishWebsite.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment