Saturday, 13 September 2014

குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி

குஜராத் மாநில பெர்டிலைசர் மற்றும் கெமிக்கல் லிமிடெட் நிருவனத்தில் நிரப்பப்பட உள்ள Technician Apprentice, Attendant Operator, Lab Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Gujarat State Fertilizers & Chemicals Limited
பணி: Technician Apprentice, Attendant Operator, Lab Assistant
துறைவாரியான விவரங்கள்:
1. Technician Apprentice
(i) Mechanical Engg
(ii) Chemical Engg
(iii) Electrical Engineering
(iv) Civil Engineering
(v) Instrumentation & Control Engg
(vi) Metallurgical Engg
(vii) Electronics & Communications Engg
(viii) Textile Engineering & Technology
(ix) Computer Engineering
2. Attendant Operator (Chemical Plant)
3. Lab Assistant (Chemical Plant)
வயது வரம்பு: 01.09.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அளிர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
1. Technician Apprentice பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Mechanical, Chemical, Electrical, Civil, Instrumentation & Control, Metallurgical, Electronics & Communications, Textile, Computer போன்ற துறைகளில் 3 வருட  டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.2830.
2. Attendant Operator, Lab Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு படமாகக் கொண்ட வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ. 3800
தேர்வு செய்யப்படும் முறை: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு வருட காலம் பயிலுநர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் அவர்களுக்குரிய பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://117.239.211.235/ers_web/pages/frm_dashboard.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014

No comments:

Post a Comment