இந்திய விமானப்படையில் குரூப் 'X' (Technical)டிரேடு, குரூப் 'Y'(Non-Techinal) டிரேடு மற்றும் குரூப் 'X & Y' டிரேடுகளில் ஏர்மேன் -ஆக பணியாற்ற திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு போட்டித் தேர்வுகள் 2015 ஏப்ரல்/மே மாதம் நடத்தப்படும்.
பணி: ஏர்மேன்
பிரிவு: குரூப் 'X' (Technical) டிரேடு
கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கில பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 முடித்திருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோவில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லாத பட்சத்தில் பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Airmen
பிரிவு: Group 'Y' (Non-Technical)
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ஆங்கில பாடத்திலும் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) அல்லது +2வுக்கு இணையான இரண்டு வருட Vocational Course படிப்பை ஆங்கில ஒரு பாடமாக இல்லாதபட்சத்தில் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Airmen
பிரிவு: Group 'X & Y'
கல்வித்தகுதி: குரூப் 'X' மற்றும் குரூப் 'Y' ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குரூப் 'X'பிரிவுக்கான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.1995 - 30.11.1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்: உயரம்: 152.5 செ.மீட்டரும், மார்பளவு 5 செ.மீட்டரும் விரிவடைய வேண்டும். உயரம் மற்றும் வயதிற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
கண்பார்வை: கண்ணாடி அணியாமல் 6/36, கண்ணாடி அணிந்த நிலையில் 6/9. ஆரோக்கியமான உடல் நிலையை பெற்றிருக்க வேண்டும்.
செவி திறன்: 6 மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒலியை துல்லியமாக கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பற்கள், ஈறுகள் ஆரோக்கியம் உடையதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, TAT (Trase Alocation Test) மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, பெங்களூர், கொச்சி, செகந்திராபாத், மும்பை, புதுதில்லி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment