Thursday, 11 September 2014

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/Admn.1/2014
பணி: Senior Assistant (Group-B)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4.200
தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்ரேஷன் குறித்து தெரிந்திருக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேஷன், அக்கவுண்ட்ஸ், செக்ரட்டேரியல் பணிகளில் ரூ.2,400 தர ஊதியத்தின் அடிப்படையில் 5 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் 2 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: Personal Assistant (Group-B)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4.200
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுகுக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 வருடங்கள் ஸ்டெனோகிராபர் பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேஷன் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: Stenographer (Group-C)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு சட்டப்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Finance Officer, JNU என்ற பெயரில் New Delhi-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், Application ID No மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரையும் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.juu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறது அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தற்போதையா பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி குறுக்காக கையெழுத்திட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றுள் செய்து அதனுடன் டி.டி இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Office of Deputy Registrar (Administration), Room No: 310,
Administrative Block, Jawaharlal Nehru University, New Mehrauli Road, New Delhi-110067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.juu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment