இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் தில்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளைகளில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேளாண் அறிவியல் தேர்வு வாரியம்.
மொத்த காலியிடங்கள்: 268
கிளைகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
தில்லி தலைமை அலுவலகத்தில் - 46
ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் - 222
பணி: தில்லி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்
காலியிடங்கள்: 46
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
பணி: விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கிளைகளில் உதவியாளர்
காலியிடங்கள்: 222
வயது: 01.08.2014 தேதியின் படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை நெட் பேங்கிங் அல்லது சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் இதற்காக வழங்கப்படும் செலானை பயன்படுத்தி செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நடத்தப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் http://www.asrb.org.in அல்லது http://www.icar.org.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.
No comments:
Post a Comment